திருச்சி மத்திய பேருந்து நிலையதில் வாகனங்களால் பொதுமக்கள் கடும் அவதி .

மத்திய பேருந்து நிலைய நுழைவு வாயிலை மறித்து நிறுத்தும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி
கண்டு கொள்ளுமா காவல்துறையும் , மாநகராட்சி நிர்வாகமும். .
திருச்சியில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் இடம் A G . லூர்துசாமி பிள்ளை மத்திய பேருந்து நிலையம் ஆகும்.
இந்த பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வதற்கு பிரதான வாயில்கள் இருந்தாலும் பேருந்து நிலைய வணிக வளாகம் வழியே உள்ளே வருவதற்கு ஒரு நுழைவு வாயில் உள்ளது. அந்த நுழைவு வாயிலின் அருகே புறக்காவல் நிலையமும் இயங்கி வருகின்றது.நுழைவ வாயிலின் அருகே மாடிக்கு செல்வதற்காக உள்ள படியின் வழியே தான் முதல் தளத்தில் உள்ள மாநகராட்சி அலுவல்கத்திற்கு செல்ல வேண்டும்.


இந்த அளவிற்கு முக்கியமானதாக உள்ள நுழைவு வாயில் வழியாகத்தான் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வார்கள். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.மக்களின் பயன்பாட்டில் உள்ள நுழைவு வாயிலை மறித்து ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இத்தனைக்கும் மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் அவ்வழியாகதான் வருகின்றனர். எதிரே புறக்காவல் நிலைபம் இருந்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் மாநகராட்சியும் , காவல் துறையும் உள்ளது. ஊரில் உள்ள அனைவரின் கண்களிலும் படும் இந்த நிகழ்வு இவர்களின் கண்களில் மட்டும் படாமல் போனது எப்படி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மக்களிள் நலன் ஒன்றையே குறிக்கோளாக ஏற்று செயல்படும் நாம் ஊத வேண்டிய சங்கை ஊதிவைப்போம். அது எப்போது விடியுமோ விடியட்டும்.
சம்மந்தப்பட்டவர்களின் காதுகளில் விழட்டும் இந்த சங்கு சத்தம்.
இவ்வாறு உபயோகிப்பாளர் உரிமை இயக்கம் பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி கூறினார்.
