திருச்சி மக்களுக்கு மொட்டை போடும் மோசடி கும்பல்.

0
full

திருச்சியில் சமீபகாலமாக தொண்டு நிறுவன பெயரிலும் தனியார் நிதிநிறுவன பெயரிலும் பல்வேறு விதமான பண மோசடி நிகழ்ந்து கொண்டே வருகிறது அந்த வகையில் சமீபத்தில் திருச்சி மக்களிடம் பெரிய அளவில் மொத்தமாக பணத்தை சுரண்டிய நிதி நிறுவனமான திரிபுரா, பிஏசிஎல் மற்றும் தெய்வீக அன்பின் தொண்டு நிறுவனம் என பல சீட்டு நிறுவனங்கள் குறிப்பாக திருச்சி மக்களை குறிவைத்து மொட்டை அடித்தது காவல்துறைக்கு தெரிந்ததே

poster

அந்தவகையில் திருச்சியில் நேற்று கோர்ட் அருகே உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட மக்கள் சீட்டு கட்ட சொல்லி பண மோசடி செய்து விட்டதாக கூறி இரண்டு நபர்கள் மீது மனு அளிக்க வந்திருந்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியபோது….

ukr

அரியமங்கலம் காமராஜ் நகர், அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் முகமது இப்ராஹிம் வயது (68) அப்பாஸ் வயது (38) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், அதில் சிறு தொழில் செய்யும் நபர்களை சேர்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஏல சீட்டில் சேர்ந்தவர்கள் 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் சீட்டு வரை தொடங்கப்பட்டு அதன் மூலம் மாதம் மாதம் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

சீட்டு முடிந்தவர்கள் சிலர் பணம் கேட்க போக அபாஸ் மற்றும் அவர் குடும்பத்தார் பணத்தை தர மறுத்துள்ளனர் இதோ தருகிறேன் நாளை தருகிறேன் என நாட்களை கடத்தி உள்ளனர் . தொடர்ந்து பணம் கேட்டு சென்றவர்களை அடியாட்களை வைத்து மிரட்டி உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தபோது ஏமாற்றப்பட்ட தொகை ரூபாய் 70 லட்சத்திற்கும் மேலாக இருப்பதால் அதனை பொருளாதார குற்றப்பிரிவுக்கு அரியமங்கலம் போலீசார் மாற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்த அப்பாசிடம் அவருடைய தொலைபேசி எண் 99945 51817 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது பதில் அளிக்காமல் அவர் தொடர்பை துண்டித்தார். மேலும் பல முறை அவருடைய எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை

திருச்சி மாநகரில் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை மாநகர காவல் துறையினர் எவ்வாறு சரி செய்யப் போகிறார்கள் என்பது மக்கள் மனதில் மிகப் பெரிய கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது.

half 1

Leave A Reply

Your email address will not be published.