திருச்சி அரசு கலைக்கல்லூரியில் மரம் நடுவிழா.

0
D1

திருச்சி அரசு கலைக்கல்லூரியில் மரம் நடுவிழா.

N2

திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட பொன்விழா ஆண்டை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் நாட்டு நலப்பணி திட்ட நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக இயற்பியல் துறை உதவி பேராசிரியரும், நாட்டுநலப்பணி திட்ட அலுவலருமான முனைவர்.கனகவள்ளி
அனைவரையும் வரவேற்றார்.
அக் கல்லூரியின் முதல்வர் மேகலா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துறைத்தலைவர்கள் ,இணைப் பேராசிரியர்கள் முனைவர் பானுமதி,முனைவர் டேவிட் லிவிங்ஸ்டன்,உதவி பேராசிரியர்கள் முனைவர் செல்வராணி, முனைவர்.ராமன்,முனைவர். ஆறுமுகம்,கெளரவ விரிவுரையாளர் பானுமதி,மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.