திருச்சியில் செண்டுமல்லி விளைச்சல் அமோகம் : விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

0
gif 1

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்தமானாங்குளன்றம், அழககவுண்டம்பட்டி, எண்டப்புளி மாங்கனாப்பட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் செண்டு மல்லி, கோழிக்கொண்டை, செவ்வந்தி போன்ற பூக்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

gif 4

கடந்த சில தினங்களாக இப்பகுதியில், பெய்து வரும் மழையால் பூக்கள் இந்த பகுதிகளில் அமோகமாக விளைந்துள்ளது. இந்நிலையில் மணப்பாறை தினசரி பூ சந்தையில் செண்டு மல்லியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மற்ற பூக்களின் விலைகள் ஓரளவிற்கு ஏறுமுகமாக இருந்தாலும், செண்டு மல்லி பூ கிலோ ஒன்றிக்கு ரூ.5 முதல் 7 ரூபாய் வரைதான் விற்பனையாவதாக கூறும் விவசாயிகள். 1ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட செண்டு மல்லிக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள பூவின் விலை வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

தினசரி பூக்களை எடுத்து மணப்பாறை சந்தைக்க கொண்டு செல்வதற்கு, வாகன எரிபொருள் செலவிற்குக் கூட கட்டுப்படியாகாத நிலையில் முதலீடு செய்த தொகையை ஈடு  கட்ட முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் நிலையறிந்து, செண்டு மல்லி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் செண்டு மல்லி சாகுபடி செய்த விவசாயிகளை கணக்கெடுத்து, நஷ்டத்தில் இருந்து அவர்கள் மீள்வதற்கு வேளாண்மைத்துறை மூலம் அரசு மானியம் வழங்கி இப்பகுதி விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.