பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

0
Business trichy

மணிகண்டம் ஒன்றியம் சோமரசன்பேட்டையில் 17,09.2019 செவ்வாய் காலை 10.00 மணி அளவில் ஆசிரியர் மு.நற்குணம்,மண்டல தி.க.தலைவர் தலைமையில் கழக தோழர்கள் , தி.மு.க.தோழர்கள் ,சமூக நீதி பேரவை தோழர்கள் ,கம்யூனிஸ்ட் தோழர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் .
அல்லித்துரையில் சடையவாத்தியார் நினைவு கல்வெட்டு கொடிகம்பத்தில் சமூக நீதி பேரவையின் மாவட்ட செயலாளர் திரு . கணேசமூர்த்தி அவர்கள் கழக கொடியை ஏற்றினார் .
சோமரசன்பேட்டையில் முத்துசாமி நினைவு கல்வெட்டு கொடிமரத்தில் தி.மு.க. திருச்சி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் திரு. எம்.ஏ. துரைபாண்டியன் அவர்கள் கழக கொடி ஏற்றினார் .
சோமரசன்பேட்டை ஊராட்சி மன்றம் அருகில் பா.சேகர் அவர்கள் கழக கொடி ஏற்றினார் .

 

web designer

நாடார்சத்திரம் சுந்தம் நாடார் நினைவு கல்வெட்டு கொடி மரத்தில் ஒன்றிய செயலாளர் சி. திருஞானசம்பந்தம் அவர்கள் கழக கொடி ஏற்றினார் .
கோனார் சத்திரத்தில் ஆசிரியர் மு. நற்குணம் ,மண்டல தி.க. தலைவர் அவர்கள் கழக கொடி ஏற்றினார் .
இரட்டை வாய்க்கால் முல்லை நகரில் மறைந்த பெரியார் நேர்முக உதவியாளர் மகாலிங்கம் அவர்கள் இல்லத்தில் சு. ராஜசேகர் அவர்கள் கழக கொடி ஏற்றினார் .
வசந்த நகர் ஆசிரியர் மு. நற்குணம் அவர்கள் இல்லத்தில் சு.மகாமணி அவர்கள் கழக கொடி ஏற்றினார் .
சோமரசன்பேட்டை பி. தியாகராசன் அவர்கள் இல்லத்தில் ஒன்றிய தலைவர் சா. செபஸ்தியான் அவர்கள் கழக கொடி ஏற்றினார் .
மதியம ஆசிரியர் மு.நற்குணம் அவர்கள் இல்லத்தில் தோழர்களுக்கு புலால் உணவு வழங்கப்பட்டது .

IAS academy

Leave A Reply

Your email address will not be published.