திருச்சியில் வீடு தோறும் விஷ்ணு சஹஸ்ரநாமம்

0
1 full

வீடு தோறும்
விஷ்ணு சஹஸ்ரநாமம்

மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும்.

இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயமாக அமைந்துள்ளது.

2 full

‘ஸஹஸ்ரம்’ என்றால் ஆயிரம். ‘நாமம்’ என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் ‘அனுஷ்டுப்’ என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது.இயற்றியவர் வியாசர் .
மகாபாரதம், மற்றும் 18 புராணங்கள், 18 உபபுராணங்கள் இவற்றையெல்லாம் இயற்றிய வியாசருக்கு இந்து மதம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய ஒவ்வொரு நூலிலும் பல அரிய பெரிய தோத்திரங்களை அடக்கியுள்ளார். அப்படித்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் மகாபாரதத்தின் ஒரு அத்தியாயமாக அடங்கியுள்ளது.

நம் முன்னோர்கள் நல்வழி என்று தாம் ஆராய்ந்து உணர்ந்த வழியில் தாமும் சென்று நலம் பெற்றபின் நம்மையும் அதைப் பின்பற்றுமாறு அன்புடன் கட்டளையிட்டுள்ளதை ‘அனுசாஸனம்’ என்பர். இப்படி அனுசாஸனங்கள் நிறைந்த அனுசாஸனபர்வத்தின் முடிவில், ஒரு சிறந்த அனுசாஸனமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் இடம் பெறுகிறது.

தெய்வ குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்தவும்
தெய்வத்தை புறத்தே அல்லது மனத்தினாலேயோ வழிபட்டு நலமடையவும்
எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றதாக
ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபட
பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், விஷ்ணு சகஸ்ர நாமத்தை துதித்தும், வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான்.

சஹஸ்ரநாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட தோத்திரம்.
ஆண்டவனின் ஆயிரம் பெயர்களை ஒருவன் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கும் வண்ணமே அதனுடைய ஆழ்கருத்துகளில் திளைத்து இச்சுவை தவிர வேறு எச்சுவையும் வேண்டேன் என்று சொல்லக்கூடிய பக்குவம் கிடைத்துவிடும் என்பது இந்துமதச் சான்றோர்களின் நம்பிக்கை.

நாமங்களை உச்சரிப்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிடவோ, பிராயச்சித்த கருமங்கள் செய்வதை விடவோ உயர்ந்தது, ஏனென்றால், அவையெல்லாம் பாவங்களை போக்குகின்றன என்பதுதான் மதநூல்களின் தீர்மானம்; ஆனால் நாமங்களை உச்சரிப்பதால், பாவம் புரியத் தூண்டும் எண்ண ஓட்டங்களே கட்டுப்படும் என்பது நாம உச்சரிப்பின் பெருமை.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.

பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திரசுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங்கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறார்கள். இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம்.

சமஸ்கிருத மொழியைச் சரியாக உச்சரித்துச் சொல்ல வேண்டும்.இல்லையேல் ஒலிநாடாவையோ குறுந்தகட்டையோ தினமும் காலையில் நமது வீடுகளில் ஒலிக்கச் செய்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம்.

திருச்சி
ஸ்ரீரங்கம் ஸ்தலத்தார்
கோவில் கந்தாடை வாதூல அண்ணன் அழகியசிங்கர் ஆச்சார்யர் வழிகாட்டுதல்படி தேவசேனா சந்திரசேகரன் தம்பதியினர் இலவசமாக சகஸ்ரநாம பாராயணம் செய்ய விரும்புவர்களுக்கு பயிற்றுவிக்கின்றார்கள்

பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண மண்டலி அமைப்பை உருவாக்கி வீடு தோறும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து வருகிறார்கள்.

பாராயணம் செய்வதற்கு எவ்வித கட்டணமும் கேட்பது கிடையாது. ஒருவர் வீட்டில் பாராயணம் செய்யும் பொழுது அவர்களாக கொடுக்கும் தொகையை கொண்டு வேத பாடசாலையில் பயிலும் மாணவர்கள் உணவிற்காக காய்கறிகள் வழங்கி வருகிறார்கள் .மேலும் பல்வேறு தர்ம காரியங்களிலும் இக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள் .
2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இவ்வமைப்பு திருச்சி புத்தூர் பகுதியில் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் வீட்டில் நடைபெற்ற விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண நிகழ்வானது புரட்டாசி மாத புதன்கிழமை 60 எண்ணிக்கையை பூர்த்தி செய்து தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

3 half

Leave A Reply

Your email address will not be published.