திருச்சியில் கோஷ்டி மோதல்..ஒருவர் வெட்டிக் கொலை!

திருச்சியில் கோஷ்டி மோதல்..ஒருவர் வெட்டிக் கொலை!

திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் ஜிம் மணிகண்டன்(35). இவரது எதிர்வீட்டில் குடியிருப்பவர் செந்தில்குமார். அங்குள்ள விநாயகர் கோயில் விழாக்களின்போது முதல்மரியாதை யாருக்கு என்பது குறித்து இவர்கள் இரு குடும்பத்தினரிடமும் கடந்த 6 ஆண்டாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இது குறித்து இருதரப்பினரிடையே தகராறு எழுந்து மோதிக் கொண்டனர்.
இதில் மணிகண்டனுக்கு முகத்திலும், செந்தில்குமாருக்கு தலையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
