உலக சாதனையின் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு

தமிழகமெங்கும் நடைபெற்ற ஒரு கோடி பனை விதைப்பு உலக சாதனை நிகழ்வின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் பல்வேறு பகுதிகளில் விதைப்பின்படி கே.சாத்தனூர் பகுதி கணக்கன்குளம் ஏரியில் 5000 பனை விதைகள் விதைப்பு பணி தண்ணீர் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வை திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் திரு .மயில்வாகனன் IPS கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பேரா.கி.சதீஷ் குமார் ஒருங்கிணைத்தார்.

உடன் அண்ணன் RK ராஜா , எடமலைப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியை புஷ்பலதா மாணவர்களுடன் பங்கேற்றார்.மருத்துவர் லட்சுமி.
நண்பர்கள், UKT, சுரேஷ், ரஜினி முருகன், உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் .மற்றும்.கே.சாத்தனூர் மாணவர்கள் பங்கேற்று முதல் கட்டமாக பனை விதைகளை கரைகளில் விதைத்தனர்.
இரண்டாம் கட்டமாக வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும்.அனைவருக்கும் கன்மலை எடிசனின் வாழ்த்துக்கள்.
