பெண்களை அசிங்கமாக திட்டிய திருச்சி பெண் அதிகாரி !

0
full

பெண்களை அசிங்கமாக திட்டிய திருச்சி பெண் அதிகாரி !

 

மணப்பாறை அருகே பண்ணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி நெடுங்குளம் போன்ற பல்வேறு கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். பன்னாங்கொம்பு பகுதியிலுள்ள பெரியகுளத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் 100 நாள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்பணியை பார்வையிட சென்ற மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பெண் அதிகாரி ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் தகாத வார்த்தையால் பேசியதாகவும் ஒரு அதிகாரி என்ற நிலையில் இருந்து மாறி சக பெண்களைப்போல் ஒருமையில் பேசியதாகவும் குற்றம் சாட்டினர்.

 

ukr

மேலும் பணித்தள பொறுப்பாளர்களுக்கு இவர்களிடம் இப்படித்தான் வேலை வாங்குவதா என்று அந்தப் பெண் அதிகாரி அசிங்கமான வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.

 

poster

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்கு செல்லாமல் பணியை புறக்கணித்துள்ளனர் பணிகளை ஆய்வு செய்ய செய்யும் பெரிய பொறுப்பில் உள்ள ஒரு பெண் அதிகாரி பணி சம்பந்தப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டாமல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுகின்ற இதுபோன்ற அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.