பள்ளக்காடு மானிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா

பள்ளக்காடு மானிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் களக்காடு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சுமதி வரவேற்றார். மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை வகித்தார்.கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் .
சங்க தலைவர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார் .ரோட்டரி சங்க திட்ட இயக்குனர் நாகராஜன் ,பள்ளி செயலாளர் சுப்பிரமணியன், டாஸ் அமைப்பு விக்னேஷ், அருண், தினேஷ், சிவராஜ், காசி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகாசிரியருமான விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பல்லாங்குழி, தாயக்கட்டை, ஆடுபுலியாட்டம் ,பம்பரம், கபடி, டயர் ஓட்டுதல், கொலை கொலையா முந்திரிக்கா, பரமபதம், ஒற்றையா இரட்டையா கண்ணாமூச்சி, பட்டம் விடுதல், கோழி குண்டு, கில்லி தாண்டு, சில்லாக்கு ,நொண்டி விளையாடுதல், கயிறு இழுத்தல் , பச்சைக் குதிரை சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மாணவர்கள் மாணவிகள் விளையாடினார்கள். நிறைவாக கார்த்திகேயன் நன்றி கூறினார்.
