திருச்சியில் இந்த வார விடுமுறைக்கான குடும்பங்கள் கொண்டாடும் கண்காட்சி

0
1

திருச்சியில் இந்த வார விடுமுறைக்கான குடும்பங்கள் கொண்டாடும் கண்காட்சி

 

திருச்சி மன்னார்புரம் வி.எஸ்.எம்.மஹாலில் (முகமது இப்ராகிம் ஹால்) டிரைமேக்ஸ், இவன்டஸ், கிரியாஸ் ஷோரூம் மற்றும் தமிழச்சி ரோட்டரிகிளப் இணைந்து நடத்தும் மலர் கண்காட்சி மற்றும் குழந்தைகள்-பேமிலி ஷாப்பிங் எக்ஸ்போ 21.09.2019 தொடங்கியது.  கண்காட்சியை ரோட்டரி கவர்னர் ஜமீர்பாஷா தொடங்கி வைத்தார்.

2

இதில் ரோட்டரி தலைவர் பிரியா கோவிந்தராஜ், செயலாளர் விக்னேஸ்வரி, கிரியாஸ் மேலாளர் சந்திரமோகன், ஹரிணி ஜூவல்லரி ராம்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இம்ரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

கண்காட்சியில் வீட்டுக்கு தேவையான் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், நகைக்கடைகள், கேரளா பர்னிச்சர் வகைகள், உணவு பொருட்கள்,பிட்னஸ் சாதனங்கள், கம்ப்யூட்டர் சாதனங்கள், டெக்ஸ்டைல்ஸ், பேன்ஸி வகைகள், ஹெர்பல் பொருட்கள் மற்றும் வீட்டிக்கு தேவையான அனைத்து பொருட்களும் காட்சி படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் குழந்தைகள் விரும்பும் வகையில் அட்வான்ஸ் வி.ஆர். டெக்னாலஜி மூலம் அலோகிராம், 13-க்கும் மேற்பட்ட உருவங்களின் மலர் கண்காட்சி, அரிய வகை மீன் கண்காட்சி, கார்ட்டூன், ஹாலிவுட் நடிகர்கள் போல் அமைக்கப்பட்ட கார்ட்டூன் உலகம், மியூசிக் பன் சிட்டி, குதிரை பைக், ஓட்டகம் சவாரி, தண்ணீர், கம்ப்யூட்டர் விளையாட்டு, வாட்டர் ரோலர், அலாவுதீன் பூதம் மற்றும் வெளிநாட்டுகள் இடம்பெற்று உள்ளன.

கண்காட்சிக்கு வரும் குடும்பத்தினருக்கு ரோஜா செடி, வண்ண மீன், மெகந்தி இலவசமாக வழங்கப்படுகிறது. 3 முதல்12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 4-டி ஷோ, பேய் வீடு, டாட்டூ இலவசமா வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலவகை பொருடகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சியில் குழந்தைகளுக்கு ஓவியம், கையெழுத்து போட்டி நடைபெற்றது. வருகிற செப்டம்பர்  23-ந் தேதி வரை காலை 10.30 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.