திருச்சியில் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் கடைமடைக்கு வராத காவிரி நீர்.

0
gif 1

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு 10 நாள்களுக்கு மேலாகியும் இன்னும் கடைமடைக்கு வந்துசேராததால் விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்காமல் உள்ளனர்.

உய்யக்கொண்டான் வாய்க்காலில் திருச்சி மாநதரப் பகுதிக்கு உள்ளேயே ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமிப்பில் தண்ணீர் விரைந்து செல்லவில்லை. இதன்காரணமாக திருவெறும்பூர் வட்டத்தில் உள்ள பெரிய ஏரியான கூத்தப்பார், கிருஷ்ணசமுத்திர குளம், தொண்டமான்பட்டி குளம், அய்யம்பட்டி குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

gif 4

இதேபோல, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் துவாக்குடி பெரியகுளம், ஆசூர் குளம், உளுந்துனி குளம், பழங்கணாங்குடி, தேனேரிப்பட்டி குளம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கும் தண்ணிர் வரவில்லை. கடைமடைக்கு தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தாத பொதுப்பணித்துறையினர், கொள்ளிடத்தில் 20 ஆயிரம் கனஅடி நீரை 10 நாள்களுக்கும் மேலாக திறந்து விட்டு கடலில் கலக்கச் செய்துள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

gif 3

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அயிலை சிவ. சூரியன் கூறியது- காவிரியை நம்பியுள்ள 17 வாய்க்கால்களையும் பருவ மழைக்கு முன்பாக தூர்வாரவேண்டும் என தொடர்ந்து வலியுறத்திவருகிறோம். தமிழக அரசு உரிய அக்கறை செலுத்தவில்லை. தண்ணீர் வரும் நேரத்தில் தூர்வாரத் தொடங்குகின்றனர். இதன் காரணமாக பெரும் குளங்கள், ஏரிகள், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேருவதில்லை என்றார் அவர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.