திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 22 பேர் மீது வழக்கு.

0
D1

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 22பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல்துறை ஆணையர் அ. அமல்ராஜூக்கு புகார் வந்தன. இதன் பேரில் மாநகர போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

N2

இதைத் தொடர்ந்து பாலக்கரை, அரியமங்கலம், காந்தி மார்க்கெட், எடமலைப்பட்டி புதூர், கோட்டை உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர் அந்த வகையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக வியாழக்கிழமை மட்டும் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

D2

ஶ்ரீரங்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை தகவல் வந்தது. இதனைதொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீஸார் ஶ்ரீரங்கத்தில் அனைத்து பெட்டிக்கடை, மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் ஶ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர்கள் சிவாஜி(36) மற்றும் சுரேஷ்(32) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள புகையிலையை பறிமுதல் செய்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.