திருச்சியில் செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு 23-ஆம் தேதி நேர்காணல்.

0
1

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராமப்புற சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு செப்.23 ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது..

மருத்துவபணியாளர் தேர்வு வாரியத்தால் 1234 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, தகுதிவாய்ந்த பெண் பதிவுதாரர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு பல்நோக்கு சுகாதார பணியாளர் பிரிவில் (a‌u‌x‌i‌l‌l​a‌r‌y ‌n‌u‌r‌s‌e ‌m‌i‌d‌w‌i‌f‌e, ‌m‌u‌l‌t‌i‌p‌u‌r‌p‌o‌s‌e ‌h‌ea‌l‌t‌h ‌w‌o‌r‌k‌e‌r-‌f‌e‌m​a‌l‌e) மருத்துவத் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனத்தில் கல்வித்தகுதியினை பெற்றிருத்தல் வேண்டும். .

இந்த காலிப்பணியிடத்திற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

2

குறிப்பிட்ட கல்விதகுதியுடைய பெண் பதிவுதாரர்கள் மட்டும் வரும் செப்.23 ஆம் தேதியன்று வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு,தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வருகை தரவேண்டும். இதற்காக பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.