திருச்சி ஆர்.சி பள்ளியில் ஒசோன் தினம் விழா கொண்டாட்டம்.

திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக உலக ஒசோன் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் அருட்பணி சின்னப்பன் தலைமை தாங்கி தலைமையை உரையாற்றினார்.
இவ்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட வனச்சரக அலுவலர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு நெகிலிபைகளை தவிர்ப்பது மரங்களை எவ்வாறு வளர்த்து பாதுகாப்பது மரம் நடுமுறை மற்றும் மழை நீரை எவ்வாறு சேமிப்பது நல்ல காற்றை எப்படி பெறுவது ஆக்ஸிஜன் சரியான முறையில் கிடைக்க வழி செய்தல் இது போன்று பல்வேறு விதமான கருத்துகளை மாணவர்களிடம் பேசினார்.
மேலும் முன்னதாக பள்ளியின் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஹென்றி வரவேற்றார் இறைவணக்க பாடலை ஜெயபிரகாஷ் பாடினார். இவ்நிகழ்ச்சியில் திருச்சி மனப்பாறை கல்வி மாவட்ட ஓருங்கிணைப்பாளர் சகாயராஜ் சுத்தம் பார்க்கிற வீட்டில என்ற பாடலை பாடி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர் கொண்டு மரக்கன்று நடப்பட்டது. இறுதியாக பள்ளியின் செய்தி தொடர்பாளர் லூயிஸ் நன்றியுரையாற்றினார். இவ்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் அலுவலர் சங்க செயலாளர் ஆச்சிரியம், பொருளாளர் ஜெயராஜ் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
