இந்தி எதிர்ப்புப் போராட்டம் வாபஸ் ஏன்?

0
D1

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து வியாழக்கிழமை பிற்பகலில், திருச்சி வந்த அவர், கரூர் செல்லும் முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க வின் போராட்ட அறிவிப்புக்கு மத்திய பாஜக அரசு பயந்து விட்டது. இது தொடர்பாக தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதே திமுக போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றிதான். இந்த போராட்டம் தொடர்பாக ஸ்டாலின் பின் வாங்கவில்லை. ஆளுநர் அழைத்து பேசியதால் தான் போராட்டம் கைவிடப்பட்டது என்றார் உதயநிதி ஸ்டாலின்.  பேட்டியின் போது திருச்சி மாவட்டச் செயலாளரும், மேற்கு தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு, திருவரம்பூர் சட்டப்பேரவை  உறுப்பினர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.