தேஜஸ் எக்ஸ்பிரஸ் பெயரை தமிழில் மாற்ற வாய்ப்பு இல்லை  !

0
1

தேஜஸ் எக்ஸ்பிரஸ் பெயரை தமிழில் மாற்ற வாய்ப்பு இல்லை  !

 

மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை தமிழில் மாற்ற வாய்ப்பு இல்லை என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

,

 

2

மதுரை-சென்னை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. முற்றிலும் ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரெயிலில் ‘எக்சிகியூடிவ்’, ‘சேர்கார்’ கட்டணம் முறை அமலில் உள்ளது. இந்த ரெயில் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெயர்கள் பல தமிழகத்தின் பெருமையை சாற்றும் வகையில் உள்ளது.

 

 

 

அதாவது திருச்சி-சென்னை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் என்பன உள்ளிட்ட பெயர்களை கொண்டதாக உள்ளது.

 

தமிழ்ச்சங்கம்…

 

இந்த நிலையில் மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயர் இந்தியில் இருப்பதால் அதனை தமிழிலில் ‘தமிழ்ச்சங்கம்’ என மாற்ற வேண்டும் என்பதை திருச்சியில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ரெயில்வே அதிகாரிகளிடம் திருச்சி, மதுரை கோட்ட பகுதிக்குட்பட்ட எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தினர். மேலும் கோரிக்கையை மனுவாக அளித்தனர்.

 

இந்த நிலையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என திருச்சியில் ரெயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “தேஜஸ் என்பது இந்தி வார்த்தையில் வேகம் என்ற பொருளாகும். தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டில் ஒருசில இடங்களில் இதுபோன்ற ரெயில் இயக்கப்படுகிறது. தேஜஸ் என்பது ஒரே பெயராக இருப்பதால் அதனை மாற்ற வாய்ப்பு இல்லை. இருப்பினும் எம்.பி.க்களின் கோரிக்கையை ரெயில்வே வாரியத்திடம் அதிகாரிகள் தெரிவிப்பார்கள். ரெயில்வே வாரியம் தான் ரெயிலின் பெயரை மாற்ற முடிவு செய்யும்” என்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.