திருச்சி கல்லூரிகளில் துவங்கப்படுகிறது போலிஸ் கிளப் !

0
1

திருச்சி கல்லூரிகளில் துவங்கப்படுகிறது போலிஸ் கிளப் !

 

திருச்சி புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கல்லூரிகளில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு போலீஸ் கிளப் என்ற அமைப்பு தொடங்கப்பட உள்ளது . இதற்கான முன் ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட மத்திய மண்டல துணை தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.

2

 

இது தொடர்பான பயிற்சி மற்றும் கருத்தரங்கு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் 18.09.2019 நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தொடங்கி வைத்தார். பயிற்சி குறித்து மாணவர்களிடம் பேசுகையில் மாணவர்கள் முன்மாதிரி மாணவர்களாக திகழ வேண்டும் மாணவர்கள் படிக்கும்போது குறிக்கோளுடன் படிக்க வேண்டும் என்றார். மேலும் கல்லூரிகளில் போலீஸ் கிளப் தொடங்கப்படுவது குறித்து மாணவரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த கிளப் மூலம்  போலீசாருக்கு மாணவமாணவிகள் உதவுவது குறித்தும்,  கல்லூரிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சக மாணவர்களை நல்வழிப்படுத்தும் குறித்து போலீசார் எடுத்துரைத்தார்.

 

 மேலும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம், ராக்கி தடைச்சட்டம்,  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டம்,  குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம்,  சமூகவலைதளங்களில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றியும் போஸ்கோ சட்டம் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயிற்சியில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.