திருச்சி அருகே கழிப்பறையில் பச்சிளங்குழந்தை மீட்பு !

0
D1

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ளது கல்லக்குடி கே.கே.நகர். இன்று காலை இப் பகுதியில் உள்ள பொது கழிவறையில் ஒரு ஆண் குழந்தையின் சத்தம் கேட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணிநேரமே ஆன ஒரு பச்சிளங்குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது.

N2

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து குழந்தையை மீட்டு சென்று திருச்சி அரசு மருத்துவமனை தொட்டில் குழந்தை திட்டத்தில் சிசுவை சேர்த்தனர். அந்த குழந்தை யாருடையது? அங்கே வீசி சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.