திருச்சி கலெக்டர் அலுவலகத்தை கதிகலங்க வைத்த இந்திய மாணவர் சங்கத்தினர் !

0
1

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை கதிகலங்க வைத்த இந்திய மாணவர் சங்கத்தினர் .

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 16.09.2019 நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுக்க இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர் மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

 

2

அங்கு அவர்கள், நடப்பு கல்வியாண்டில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோ‌‌ஷமிட்டு சிறிது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

அப்போது அவர்கள் கோரிக்கை தொடர்பாக கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மாணவர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க அறிவுறுத்தினர். அதை ஏற்று, சங்க நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டும் கூட்டரங்கின் உள்ளே சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.