திருச்சி மத்திய சிறைச்சாலையில் காவல்துறை அதிரடி நடவடிக்கை

0
1

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்தியச் சிறைச்சாலையில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. இதில் குற்ற வழக்குகளில் சிக்கிய இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி திரிந்த நைஜீரியா நாட்டினைச் சேர்ந்த ஸ்டீபன் ஜான் ஓபுஜி (வயது 32 )எனும் நபரிடம் எந்தவித அடையாள அட்டைகளோ, ஆதாரங்களோ எதுவும் இல்லாததால் அந்நபரை திருப்பூர் காவல் துறையினர் மூலம் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

2

இந்நிலையில் கடந்த ஜூலை 19 -ம் தேதி இரவு முதல் ஸ்டீபன் ஜான் ஓபுஜி திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்றது போலீஸாருக்குத் தெரியவந்தது. அதன்மூலம் சிறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் கைதி தப்பித்து சென்றதற்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பின்னர் சிறைக்கு வெளியே உள்ள மாநகர போக்குவரத்து கேமராவை பார்வையிட்டதில் அன்றைய தினம் சிறையினுள் ஒரு தண்ணீர் லாரி வந்து சென்றது தெரியவந்தது. மேலும் கைதி அதன்மூலம் தப்பித்து சென்றிருக்க வாய்ப்புகள் இருப்பது உறுதியானது.

இச்சம்பவம் திருச்சி மத்திய சிறையிலும், காவல்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. எனவே இச்சம்பவத்தை மாற்றியமைக்கும் விதமாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில்  திருச்சி கே.கே நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அதன்மூலம் கைதியின் புகைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு தேட ஆரம்பித்த தனிப்படை போலீசார் ஒரு கட்டத்தில் ரகசிய முறையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளி இருக்குமிடத்தை கண்டறிந்து சென்று பெங்களூர், ராஜஸ்தான், ஹரியானா என்ற பல மாநிலங்கள், பல ஊர்கள் பின்தொடர்ந்து இறுதியில் செப் -13 தேதி டெல்லிக்கு அருகே உள்ள ஹரியானா மாநிலம், சோனிபட் மாவட்டம், பாகல்கர்க் சவுக் எனுமிடத்தில் தப்பியோடிய கைதியை வளைத்து பிடித்தனர்.

மேலும் பிடிக்கப்பட்ட ஸ்டீபன் ஜான் ஓபுஜி பற்றி காவல்துறையினர் கூறும்போது, தப்பித்து சென்ற கைதி ஹரியானாவில் உள்ள மிகப்பெரிய டிரக்ஸ் கேங்க் நாதுராம் கேங்குடன் இணைந்து சுற்றி வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாதுராம் காவல்துறை மூலம் கைது செய்ததையடுத்து ஸ்டீபன் ஜான் ஓபுஜியை பின் தொடர்ந்து ஒரு இடத்தில் வைத்து வளைத்து பிடித்ததாக கூறினர்.

 

பின்னர் பிடிக்கப்பட்ட கைதி ஸ்டீபன் ஜான் ஓபுஜியை செப் 14 தேதி ஹரியானா மாநிலம் சோனிபட் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் -1 முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ரெயில் மூலம் தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேற்படி செப் 16 தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் -2 ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி கைதி ஸ்டீபன் ஜான் ஓபுஜி சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் திரைப்படங்களில் சமீபத்தில் வெளிவந்த சிங்கம் படத்தில் தமிழக போலீசாக, போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா இன்டர்நேஷனல் டிரக் டீலர் ஆன டேனியை கண்டம் விட்டு கண்டம் சென்று தூக்கிக் கொண்டு வருவது போல் இன்று திருச்சி போலீசார் டிரக் கும்பலுடன் சம்பந்தப்பட்ட ஸ்டீபன் ஜான் ஓபுஜியை கைது செய்து கொண்டுவந்தது திருச்சி காவல்துறை வட்டாரங்களில் மட்டுமல்லாது தமிழக காவல் துறையினருக்கும் அந்தஸ்தையும் சிறப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் ஏற்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய சிறை காவல் துறையினர் திருச்சி மத்திய சிறைச்சாலை மற்றும் கைதிகள் முகாம்களில் ஏற்கனவே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சிறைச்சாலைக்குள் செல்போன் பயன்பாடு இருந்து வருவதாகவும், அதனை உள்ளே இருக்கும் கைதிகளுக்கு அங்குள்ளவர்கள் அளித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது, அதனடிப்படையில் இனி செல்போன் பயன்பாடுகளை குறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக காவல்துறை வட்டாரங்கள் கூறிவருகின்றன.

3

Leave A Reply

Your email address will not be published.