திருச்சி அருகே நகை திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

0

துறையூர் ஆத்தூர் சாலையில் போலீஸார் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற துறையூரைச் சேர்ந்த அ. முஜிபூர் ரஹ்மான்(22), ம. எழுவன்(28), த. இளவரசன்(19), வடக்குவெளி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கா. அரவிந்தசாமி(19) ஆகிய நான்கு பேரையும் நிறுத்தி விசாரித்தனர்.

சந்தா 2

அவர்கள் நான்கு பேரும் துறையூரில் உள்ள தங்கநகர் மற்றும் தனலட்சுமி நகரில் உள்ள வீடுகளில் திருடியதும்,  வெள்ளிக்கிழமை (செப். 13 )   துறையூரிலிருந்து செந்தாரப்பட்டி சென்ற தனியார் பேருந்தில் பயணித்த செந்தாரப்பட்டி சிவகாமு(58)  அணிந்திருந்த ஆறரை  பவுன் தாலி சங்கிலியைத் திருடியதும் தெரியவந்தது. 

‌சந்தா 1

இதனையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் வசமிருந்து மொத்தம் இருபதரை பவுன் தங்க நகைகளையும், ரொக்கப்பணம் ரூ. 20,000-ஐயும் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.