திருச்சி அருகே சரக்கு வேன் மோதி பெண் உயிரிழப்பு

0
Full Page

 

Half page

புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமய்யா (50) மனைவி மல்லிகா(48). இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது மகன் சதீஷ் (22) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருச்சி – புதுகை தேசிய நெடுஞ்சாலையில் குண்டூர் அருகே உள்ள தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த உதவி காவல்நிலைய சோதனை சாவடியைக் கடக்க முயன்றபோது நிலைத்தடுமாறி இருவரும் சாலையில் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மல்லிகா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேகத்தடுப்பை அப்பகுதியில் இருந்து அகற்றினர். இதைத் தொடர்ந்து மல்லிகா உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நவல்பட்டு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.