திருச்சியில் மாமியாரை தாக்கிய குடிமகன் கைது

0

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற இளைஞர், மாமியாரைத் தாக்கிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

food

திருச்சி, கன்டோன்மென்ட் வார்னர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஒ. சுசீலா (50). இவருக்கு 4 மகள்கள். முதலாவது மகளின் கணவர் காஜா பேட்டை அண்ணா நகரைச் சேர்ந்த ம. செல்வம். இவர், சுசீலாவின் கடைசி மகளை பலாத்காரம் செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று, கடந்தாண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்து அதில் ஜாமீன் பெற்று செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியே வந்தார். இந்நிலையில் மீண்டும் மாமியாரிடம் சென்று தகராறு செய்த அவர் மாமியாரைத் தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை, சனிக்கிழமை மீண்டும் கைது செய்தனர். பெண் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.