முதன் முறையாக திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணத்துப்பூச்சி அஞ்சல் தலை கண்காட்சி

0
Business trichy

முதன் முறையாக திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணத்துப்பூச்சி அஞ்சல் தலை கண்காட்சி

திருச்சி, வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தபால்தலை சேகரிப்பாளர்கள் மூலம் முதன்முதலாக வண்ணத்துப்பூச்சி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.

Rashinee album

கண்காட்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ,இலங்கை, இஸ்ரேல், மலேசியா, சிங்கப்பூர், பல்கேரியா, நிவீஸ், துவாலு, பராகுவே ,போலந்து, பின்லாந்து, பூட்டான், கம்போடியா, நியூஸிலாந்து, வியட்நாம், பெல்ஜியம், கியூபா, காங்கோ, ஈரான், மால்டா, நேபாளம், அயர்லாந்து உட்பட 70 நாடுகள் வண்ணத்துப் பூச்சிக்காக வெளியிட்ட பொது பயன்பாடு தபால் தலைகள், நினைவார்த்த தபால் தலைகள், குறு வடிவ தபால்தலைகள், முதல் நாள் மற்றும் சிறப்பு அஞ்சல் உறைகள் உட்பட நூற்றுக்கணக்கான தபால்தலைகள் காட்சிப்படுத்தப் பட்டன.

Image


உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உள்ள வண்ணத்துப்பூச்சி
தபால் தலைகளைக் கொண்டு கண்காட்சி நடைபெற்றது.

வண்ணத்துப்பூச்சி கருப்பொருளில் தபால் தலை சேகரிப்பில் ஈடுபடுபவர்கள் பூங்கா சான்றிதழ் படிப்பிலும் பங்கேற்றார்கள். இதனால் வண்ணத்துப்பூச்சி இனங்கள், பருவங்கள், வாழ்க்கை முறையினை அறிந்து கொண்ட இக்கல்வியானது சேகரிப்புகலையினை மேன்மையுறச் செய்யும். மாவட்டம், மண்டலம், மாநிலம், தேசிய, பன்னாட்டு அளவிலான அஞ்சல் தலை கண்காட்சியில் சேகரிப்பாளர்கள் சிறப்பான முறையில் பங்கேற்க வழிவகுக்கும்.
தபால் தலை கண்காட்சியில் ஹாபீஸ் மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார், சண்முகம், லால்குடி விஜயகுமார், ரகுபதி, பாண்டி ,சுபேர், கிரீஸ் குமார், நாசர், கமலக் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றார்கள். வனச்சரக அலுவலர் முருகேசன் பயிற்சி வகுப்புகளை எடுத்துரைத்தார்

Ukr

Leave A Reply

Your email address will not be published.