திருச்சியில் 32 போலிஸ் வாக்கிடாக்கிகளை திருடி விற்றவர்கள் கைது !

திருச்சியில் 32 போலிஸ் வாக்கிடாக்கிகளை திருடி விற்றவர்கள் கைது !
சமீபத்தில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வாகனத்தில் ரோந்து பணியில் இருந்த காவல் உதவியாளர் ஒருவரின் தகவல்தொடர்பு கருவியானது அவர் வாகனத்தில் வைத்துவிட்டு அருகில் சென்றிருந்த போது வாகனத்தில் வைத்திருந்த வாக்கிடாக்கி கருவி தொலைந்து போனது இதனால் காவல்துறை வட்டாரம் அந்த அதிகாரி மீது அலட்சியமாக இருந்த காரணத்தினால் நடவடிக்கை மேற்கொண்டது.

அதனைத்தொடர்ந்து திருச்சியில் காவல்துறை எஸ்.பி அலுவலகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துப்புரவு பணியாளர் என்ற போர்வையில் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து காவல் துறையினர் பயன்படுத்தும் வாக்கிடாக்கி (தகவல்தொடர்பு கருவியை ) யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக எடுத்துச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக கேகே நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சீனிவாசன் (45 ) என்பவர் எடுத்ததாக தெரிய வந்தது. அதன் மூலம் சீனிவாசனை போலீசார் விசாரித்ததில் அவர் காமராஜ் என்பவரிடம், 32 வாக்கிடாக்கிகளை விற்றதாக வாக்குமூலம் அளித்தார். அதன் மூலம் செப் 14 தேதி திருடி வந்த பொருட்களை வாங்கிய/விற்ற குற்றத்திற்காக சீனிவாசன் மற்றும் காமராஜ் இருவர் மீதும் கே.கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
பொதுமக்களின் உடமைகளோ பொருட்களோ திருட்டு போனால் காவல்துறைக்கு சென்று புகார் அளிப்பது வழக்கம், ஆனால் காவல்துறையினரின் உடைமைகளை அடிக்கடி காணாமல் போகும் சம்பவம் திருச்சி மாநகர காவல்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
