புது உலகம் படைக்க திருச்சி புத்தகத் திருவிழாவுக்கு வாங்க ! ..

0
Business trichy

புது உலகம் படைக்க திருச்சி புத்தகத் திருவிழாவுக்கு வாங்க ! ..

 

 

உலகத் தத்துவங்கள் முதல் சமையல் குறிப்புகள் வரை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? உடல்நல, மனநல பிரச்சனைகள் சிக்கல்கள் தொடங்கி அமெரிக்க ஏகாதிபத்திய, இடது-வலது அரசியல் சிக்கல்கள் வரையிலான உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் வேண்டுமா? இலக்கியம் படிக்க விரும்புகிறீர்களா? தாமதிக்காமல் உடனே கிளம்புங்கள் நம் திருச்சி புத்தகக் கண்காட்சிக்கு!

 

60க்கும் மேற்பட்ட அரங்குகள், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகள், தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் என சனிக்கிழமை (14/09/2019) அன்று துவங்கியது திருச்சி புத்தக கண்காட்சி. வரும் 10 நாட்கள்(24/09/2019) வரை தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வை நான்காவது வருடமாக திருச்சி ரோட்டரி சங்கம் மற்றும் லேண்ட்மார்க் எக்ஸ்போ இணைந்து  நடத்துகிறார்கள்.

loan point

nammalvar

அது குறித்து ஒருங்கிணைப்பாளர்களிடம் அணுகிய போது,

“வாசகர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து வாசிப்பை ஊக்கப்படுத்தவும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை அவர்கள் கல்வி நிறுவனங்கள் மூலம் அழைத்து இங்கேயே சிறப்பு  போட்டிகள் நடத்தி அதன் மூலம் வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை  முன்னெடுப்பது தான் இந்த புத்தக கண்காட்சியின் நோக்கம்” என்கிறார் புத்தக கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜாபர்.

 

புத்தக கண்காட்சியின் முதல் நாளான நேற்று 14.09.2019  ஒருபுறம்  விற்பனையாளர்கள் தங்களது அரங்கில் புத்தகங்களை அடுக்கியபடி, பரபரப்புடன் புத்தகம் வாங்க வரும் வாசகர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். கலை, இலக்கியம், அரசியல், ஆங்கில நாவல்கள், ஆன்மிகம் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

 

புத்தக பதிப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் சில பொதுவான சில எதிர்பார்ப்புகளை முன்வைதார்கள் “வியாபாரமும் பெருக வேண்டும் வாசகர்களும் வளர வேண்டும். நஷ்டம் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல எப்படியும் மக்கள் நிறைய புத்தகம் வாங்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம். மக்கள் மன்றத்தில் அடிக்கடி கண்காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடப்பதால் இந்த இடத்தில் மக்கள் கூட்டம் வரும் என்று நம்புகிறோம்” என்றனர்

ஐ.டி ஊழியர் தங்கராசு

புத்தகம் வாங்க வந்த வாசகர்களின் மனநிலையை தெரிந்துகொள்ள அவர்களிடம் பேசியபோது,

 

“எனக்கு கவிதை புத்தகங்களில் தான் ஆர்வம்”என்று கூறும் ஐ.டி ஊழியர் தங்கராசு தன் கையில் இருக்கும் அம்பேத்கரின் ‘இந்தியாவில் ஜாதிகள்’ என்ற புத்தகத்தைக் காட்டி அதை தான் வாங்கியிருக்கிறேன் என்று பெருமையுடன் காண்பித்தார்.

web designer

மேலும் “என்னதான் ஆன்லைனில் நிறைய புத்தகங்கள் கிடைத்தாலும் புத்தகத்தை நேரில் பார்த்து தொட்டு வாங்குவது தனி சுகம். மேலும் இதில் டெலிவரி சார்ஜ் போன்ற பிரச்சனனைகள் இல்லை. புத்தக கண்காட்சி என்றால் பல்வேறு வகைப்பட்ட நூல்களை காண ஒரு வாய்ப்பாகவும் அமையும்.  இங்கு தினமும் வந்து சிறிது நேரம் செலவழிக்கலாம் என்று இருக்கிறேன்” என்றார்.

வெங்கடேஷ்

கை நிறைய புத்தகம் வைத்துகொண்டிருந்த பொறியியல் பட்டதாரி வெங்கடேஷிடம் பேசியபோது “ஆன்லைனில் தேடியும் கிடைக்காத ஆங்கில நாவல்கள் மலிவான விலையில் நல்ல தரத்துடன் இங்கே கிடைக்கிறது.

சினிமாவில் ஆர்வம் உள்ள எனக்கு இந்த நாவல்கள் நல்ல கற்பனை சக்தியை வளர்க்க   கைகொடுக்கும். நல்ல கதை எழுதுவதற்கும் உதவும்.அதனால் தான்  மாறுபட்ட கதைக்களம் கொண்ட  நாவலாக தேடிப்பார்த்து  வாங்கியிருக்கிறேன்” என்றார்.

 

இவற்றோடு, புத்தகக் கண்காட்சியில் மாலையில் நடைபெற்ற நிகழ்வில் தாய் மொழியின் முக்கியத்துவத்தைக் குறித்தும், திருக்குறள் படிப்பதை குறித்தும் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசினார். புத்தக வாசிப்பின் அவசியத்தை குறித்து தங்களது கருத்துக்களை துணை ஆணையர் மயில்வாகனன் அவர்களும்  தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மாவட்ட தலைவர் புளுகாண்டி அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.

 

புத்தகக் கண்காட்சியில் தினமும் மாலை கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் தினமுன் மாலை வேளைகளில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, நடனப்போட்டி, கட்டுரைபோட்டி என போட்டிகள் நடைபெறவிருக்கிறது.போட்டியில் கலந்துகொள்ள விரும்புவார்கள் 99949 16885 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

புத்தக கண்காட்சியை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிடலாம். கண்காட்சியில் வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி. எல்லாவற்றுக்கும்

மேலாக உள்ளே செல்ல அனுமதி முற்றிலும் இலவசம்.

 

புத்தகம் படிக்க, புதுஉலகம் படைக்க வாங்க செல்வோம் திருச்சி புத்தக கண்காட்சிக்கு

 

பியர்சன் லினேக்கர்.ச.ரே.

Pearson lenekar.S.R.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.