திருச்சி ரயில்வே பணிமனையில் மயக்கமடைந்த அதிகாரி

0
D1

பொன்மலை ரயில்வே பணிமனையில் நேற்று எஸ்ஆர்எம்யூ நிர்வாகி வீரசேகரன்  தலைமையில் எஸ்ஆர்எம்யூ எலெக்ட்ரிக்கல் பிரிவினைச் சேர்ந்த  பேர் 50 பேர் காலை 11.30 மணிக்கு  அதிகாரி WPO சங்கரன் அறைக்கு சென்றுள்ளனர். எஸ்ஆர்இஎஸ் நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அவர்கள் முற்றுகையில் ஈடுபட ஆரம்பித்தனர். குறிப்பாக எஸ்ஆர்இஎஸ் நிர்வாகிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய கோரி அவர்களின் முற்றுகை இரவு 8.30 மணி வரை நீடித்தாக தெரிகிறது.

N2

குறிப்பாக மதிய உணவுக்கு கூட அதிகாரி சங்கரன் அனுமதிக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து அவர் அறையிலேயே முடங்கிக்கிடந்தால் ஒரு கட்டத்தில் அவர் மயக்கமாகி விழுந்து விட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அதிகாரி சங்கரன் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் பொன்மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

N3

Leave A Reply

Your email address will not be published.