திருச்சி மாநகராட்சியின் சாலைகளின் அவலநிலை.

திருச்சி அரியமங்கலத்தில் 2 நாட்கள் பெய்த மழையினால் சேறும் பகுதி மாறிய சாலையில் சீரமைக்க விட்டதால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் 29-வது வார்டு மேல அம்பிகாபுரம், கோல்டன் நகர் பகுதி ஏராளம் குடிசைப் பகுதிகள் உள்ளன இப்பகுதியில் 10 ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படவில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்து புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை இதை கண்டித்தும் சாலைவிதியை கோரியும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள் என்றும் யாருக்கும் கண்டுகொள்ளவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோல்டன் நகர் பகுதி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது அதனால் பணிகள் முடிந்த பின் பள்ளம் சரிவர மூடவில்லை. இதனால் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இப்பகுதி சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது மேலும் ஆங்காங்கே சாலையில் பள்ளங்களும் இருப்பதால் முதியோர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் டூவீலரில் வருபவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே எஸ் ஆங்கில எழுத்து வடிவில் சொல்லும் வாகனத்தில் மிகுந்த சிரமத்துடன் இயங்கி செல்கின்றனர் . பள்ளி மாணவர்கள் வேறு பாதையில் நீண்ட தூரத்திற்கு சுற்றி செல்வதில் தாமதம் ஏற்படுகிறது எனவே உடனடியாக புதிய சாலை அமைத்து இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
