திருச்சியில் லாரி மோதி பள்ளி காவலாளி உயிரிழப்பு.

0
D1

திருச்சி கண்டோன்மென்ட் ஆர் சி ஸ்கூல் முனீஸ்வரர் கோவில் எதிரில் நேற்று காலை 6 மணி அளவில் 70 வயது முதியவர் லாரி மோதியதில் பலி.

புதுக்கோட்டை நாஞ்சூர் எட்டுக்கால் பட்டி பகுதியை சேர்ந்த இன்னாசிமுத்து (வயது 71). அவரின் மனைவி மாரியம்மாள் அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருந்த நிலையில் இன்னாசிமுத்து திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஜேம்ஸ் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பணிக்குச் சென்று நேற்று காலை 6 மணி அளவில் களைப்பின் காரணமாக எதிரில் இருந்த டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார் டீ குடித்துவிட்டு பணியைத் தொடங்க ஜேம்ஸ் பள்ளிக்கு வருவதற்காக ரோட்டை கடந்து உள்ளார்.

N2

அப்பொழுது திடீரென அதி வேகமாக வந்த லாரி ஒன்று இன்னாசிமுத்து வின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இன்னாசிமுத்து இறந்தார் உடனே அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் இதற்கு புலனாய்வு போக்குவரத்து காவல் துறை போலீசார் இன்னாசிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

D2

மேலும் லாரி ஓட்டுநர் லாரியை விட்டுவிட்டு ஓடிவிட்டார். விசாரித்ததில் திருச்சி அண்ணா நகர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஷேக் மூலையில் (வயது 31) என்பவர் என்று தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.