திருச்சியில் தகவல் ஆணைய மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.

0
full

திருச்சி மாவட்டத்திருந்து பெறப்பட்ட தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பேரூராட்சி துறை, கல்வித்துறை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை திருச்சி மாவட்ட ஆட்சியரத்தில்; வெள்ளிக்கிழமை நடைபெற்றது மாநில தகவல் ஆணையம் சு.முத்துராஜ் எஸ்.டி.தமிழ் குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

ukr

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மாவட்ட கல்வி அலுவலகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் ஈவெரா கல்லூரி, கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றை மூலம் பெறப்பட்ட 36 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர்கள் மற்றும் பதில் அளிக்க வேண்டிய அலுவலகங்கள் என இருத்தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி 36 மனுக்கள் மீதான விசாரணையை முடித்து வைக்கப்பட்டது.

poster

இதேபோல பேரூராட்சி துறை நகர நிலவரித் திட்டம் நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் பேரூராட்சி உதவி இயக்குனர் நகராட்சி இயக்குனர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகம் தாட்கோ ஆகிய மூலம் பெறப்பட்ட 26 மனுக்கள் தொடர்பான இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி மனுக்கள் மீதான மேல்முறையீட்டை முடித்து வைத்தப்பட்டது.

இந்த விசாரணையில் துறை அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்ட பொறுப்பு அலுவலகத்தில் என பலர் கலந்து கொண்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.