திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

0
Full Page

பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி சுமைப்பணி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Half page

திருச்சி பழைய ஆட்சியர் அலுவலக சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமைவகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் ரெங்கராஜன் கோரிக்கைகளை வலியுறித்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில்,44வகையான தொழிலாளர் நல சட்டங்களில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையிலான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 55 கிலோ மூட்டை தூக்கும் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் நிர்வாகிகள் ரமேஷ், சண்முகம், பாபு, செந்தில், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.