திருச்சியில் இலவச உணவுப்பொருள் தயாரிப்பு பயிற்சி 20-ம் தேதி தொடக்கம்.

0
full

திருச்சியில் இலவச உணவுப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி, வரும் செப்-20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

ukr

 திருச்சி மேலப்புதூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கண்டோன் மென்ட்கிளை மாடியில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், வரும் செப்-20 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு அப்பளம், ஊறுகாய், மசால் பொடிகள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.

poster

இப்பயிற்சியில், சாம்பார், ரசம், குழம்பு, கறிமசால், பிரியாணி, இட்லி, பருப்பு சாதம் உள்ளிட்ட பொடிகள், மட்டன், சிக்கன் மசாலாக்கள், நெல்லிக்காய், பூண்டு, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட ஊறுகாய், அப்பளம், ஜுஸ், சர்பத், ஜாம், ரோஸ் மில்க் சிரப், பாதம் பால் உள்ளிட்ட பல் வேறு உணவுப்பொருள்கள் தயாரிப்பு இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

 இதில், சேர்ந்து பயன்பெற விரும்புவோருக்கு செப்.16 ஆம் தேதி முதல் சேர்க்கை நடைபெறவுள்ளது.மேலும், விவரங்களுக்கு 0431-2412825, 9994737185 6382018981 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

half 1

Leave A Reply

Your email address will not be published.