திருச்சி உறையூரில் தீ விபத்து : 4 குடிசைகள் தீக்கிரை.

திருச்சி உறையூரில் வியாழக்கிழமை காலை அடுத்தடுத்த வீடுகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 குடிசை வீடிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
திருச்சி உறையூர் தெற்கு வெள்ளாளத் தெருவில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகளாக உள்ளதால் காலை வெளியே சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். கடந்த வாரம் இதே பகுதியில் வசித்து வந்த சொக்கலிங்கம் என்பவரது வீட்டில் தீ விபத்து ஏற்ப்பட்டு வீடு மற்றும் பொருட்கள் முழுமையாக சேதமடைந்தன.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (38) வீட்டில் இருந்து புகை வெளியேறிது . இதை கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மற்ற வீடுகளுக்கும் தீ பரவியது. இரண்டு மணி போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தில் செல்வம் (38), மாரியம்மாள் (70), மகிழம்பாள்(67), லட்சுமி (43) ஆகியோரது வீடு முற்றிலும் சேதமடைந்தது.பல ஆயிரம் மதிப்பு துணி மற்றும் மளிகை பொருட்கள் சாம்பலாகின.

இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து தீ விபத்திற்கு காரணம் நாசவேலையா அல்லது மின்கசிவா என விசாரித்து வருகின்றனர். இதற்கு இடையில், தீ விபத்திற்கு காரணம் நாசவேலை என கூறி குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களுடன் உறையூர் காவல் நிலையத்தை முற்றிகையிட்டனர். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
