திருச்சியில் 95,411 வாகன ஓட்டிகள் மீது வழக்கு.

0
Business trichy

திருச்சி சரகத்தில் 15 நாட்கள் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 95,411 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக திருச்சி சரக காவல் துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மோட்டார் வாகன சட்டத்தை மீருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சிசரகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் சிறப்புக்கவனம் செலுத்தியதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 95,411 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

loan point
web designer

ஏற்கெனவே சீட் பெல்ட் அணியாமல் திருச்சி சரக எல்லைக்குள் நுழையும் வாகனங்கள் அந்தந்த மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடி மற்றும் சுங்கச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

nammalvar

மேற்கண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இதுநாள் வரை வாகன விபத்து வழக்குகளில் விபத்துக்கு காரணமானவர் எதிரியாக பாவிக்கப்பட்டு, அவர் மீது மட்டும் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இனிவரும் காலங்களில் வாகன விபத்து வழக்குகளில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்து விபத்துக்குள்ளான நபர் அல்லது காயம்பட்ட நபர் மீதும் மோட்டார் வாகனச் சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க வேண்டிய காப்பீடுதொகையை பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.