திருச்சியில் வாகனச் சோதனையின் போது சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் சிக்கினார்.

0
D1

திருச்சியில் தொடர்ந்து சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் ஈடுபட்டு வந்த நபரை, வாகனச் சோதனையின் போது போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து நகை மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

N2

திருச்சி, பொன்னகர் அருகேயுள்ள செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் மா. இமாகுலேட்டா எழிலரசி (50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த செப். 5 ஆம் தேதி இரவு இவர்,கடையை மூடிவிட்டு சென்றபோது, அவ்வழியே சென்ற மர்ம நபர், எழிலரசி அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில், போலீஸார், வியாழக்கிழமை மாலை நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை பகுதியில் மேற்கொண்ட வாகனச் சோதனையில், சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் ஒளவையார் தெருவைச் சேர்ந்த பெ. புஜிஇம்ரான் (24) என்பதும், அவர்தான் வழிப்பறியில் நகையைப் பறித்துச் சென்றதும் தெறியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து, நகைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.