திருச்சியில் லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது .

0
full

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்வதாக இருவரை சமயபுரம் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ukr

சமயபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்கபடுவதாக சமயபுரம் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சமயபுரம் காவல் ஆய்வாளர் மதன் தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் தீவிரசோதனை நடத்தினர். அப்போது திருச்சி  உறையூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த துரை மகன் சந்திரசேகர் (25), திருச்சி அண்ணா சிலை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் செந்தில்குமார் ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தபோது இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரிகளையும்,
ரூ.2,500 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

half 1

Leave A Reply

Your email address will not be published.