வரி உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை.

0
Business trichy

திருச்சியில் வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்திஅனைத்து குடியிருப்போர் நல சங்கத்தினர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து , அதிகாரிகளிடம் மனு அழைத்துச் சென்றனர் . மனு கொடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

web designer

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 60வார்டுகளுக்கு 50 சதவீத வரி உயர்வும் , 61முதல் 65 வரையிலான வார்டுகளுக்கு 12 மடங்கு வரியை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது . இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து முதல்வர்  உள்ளிட்ட அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர் . ஆனால் மாநகராட்சி நிர்வாகம் தாங்கள் விதித்த வரியை வசூலிப்பதில் தீவிரம் காட்டியது .இதை தொடர்ந்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி , அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திங்கள்கிழமை மனு கொடுக்கும் போராட்டம்  நடத்தப் போவதாக அறிவித்தனர் . அதன் படி திங்கள்கிழமை காலை 70-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு திரண்டு மனு கொடுக்க அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர் .

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அலுவலகத்தின்  வாயில் நுழைவு கதவுகளை இழுத்து மூடி அவர்களைத் தடுத்து நிறுத்தினர் . இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து நலச்சங்க நிர்வாகிகளை மட்டும் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர் .தொடர்ந்து , அதிகாரிகளிடம் மனு அளித்துச் சென்றனர் .இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.