குடிநீர்க் கேட்டு காலி குடங்களுடன் ஆட்சியரகம்  முற்றுகை .

0
1 full

திருச்சியில் குடிநீர்க் கேட்டு காலி குடங்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளாட்சித்துறை எஸ் .பி.வேலுமணி பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றதன் எதிரொலியாக குறைதீரக்கூட்டத்துக்காக நியமிக்கப்படும் பாதுகாப்பு போலீஸாரைவிட  கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தனர் .

அப்போது, பழைய ஆட்சியரங்கரம் சாலை வழியாக வந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆட்சியரகத்துக்குள் நுழைய முயன்றனர். அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புரக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆட்சியரகத்துக்கு வெளியே சாலையோரம் காலி குடங்களை வைத்து வித்து விட்டு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அந்தப் பெண்கள் அளித்த மனு-

2 full

திருச்சி மாவட்டம், மணிகன்டம் ஒன்றியம் சேதுராப்பட்டி ஊராட்சியில் உள்ள சூறாபிவளிப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 5 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து வினியோகம் செய்யப்படுவதும் பற்றாக்குறையாகவே உள்ளது. எனவே புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்துதர வேண்டும். காவேரி குடிநீர் வினியோகத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.