காவேரி கூக்குரல் பேரணி 13-ம் தேதி திருச்சி வருகை.

0
D1

காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக சத்குரு மேற்கொண்டுள்ள மோட்டார் சைக்கிள் பேரணி நாளை திருச்சி வர உள்ளது. கலைஞர் அறிவாலயத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் 10.09.2019 அன்று நடைபெற்றது. இதில் ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியது.

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இது ஈஷா அவுட்ரீச் மேற்கொள்ளும் 2-வது நதி மீட்பு களப் பணியாகும். இவ்வியக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவேரி நதிப் படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வியக்கத்தில் இரு மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சத்குரு தலகாவேரியில் இருந்து கடந்த 3-ம் தேதி மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கியுள்ளார். அவருடன் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குழுவும் உடன் பயணிக்கிறது. கர்நாடகாவில் இருந்து  (செப்.11) தமிழகம் வரும் இப்பேரணி ஓசூர், தருமபுரி, மேட்டூர், ஈரோடு வழியாக நாளை திருச்சி வருகிறது. இதையொட்டி, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாபெரும் பொது நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். சத்குரு அவர்கள் விழாவில் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். முன்னதாக, காலை 11 மணியளவில் டி.என்.எஃப்.சி.எல்.லில் நடக்கும் விழாவிலும் சத்குரு பங்கேற்கிறார்.

N2

திருச்சியில் இருந்து புறப்படும் பேரணி அன்றைய தினம் மாலை தஞ்சாவூர் செல்கிறது. பின்னர், திருவாரூர் சென்று அங்கிருந்து புதுச்சேரி, வழியாக செப்.15-ம் தேதி சென்னையை அடையும். இப்பேரணியின் நிறைவு விழா கோவையில் 17-ம் தேதி நடைபெற உள்ளது என அவர் கூறினார்.

D2

காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், விவசாயிகள், தொழில் துறையினர், ஊடகத் துறையினர் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பட்டோர் தங்களின் பேராதாரவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

N3

Leave A Reply

Your email address will not be published.