திருச்சி காவிரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

0
Business trichy

திருச்சியில் காவிரியில் தண்ணீர் வந்ததையடுத்து நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. அதனுடன் நீரின் வேகமும் பன்மடங்காக அதிகரித்து கொண்டே வருகிறது. திருச்சி முக்கொம்பூர் தடுப்பணை வேலைப்பாடுகள் நடந்துக்கொண்டிருப்பதால் நீரின் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாத சூழ்நிலை அமைந்துள்ளது.

இதனிடையில் தண்ணீர் வந்ததையடுத்து பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆற்றில் உற்ச்சாகத்துடன் குளிக்க செல்கின்றனர். அப்படி குளிக்க செல்லும் நபர்கள் தண்ணீரின் நிலையறியாமல் ஆற்றில் அதிக தூரம் கடந்து சென்றும், உயரத்தில் இருந்து குதித்தும் விளையாட்டு தனமாக குளிக்கின்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு விபரீதமாக மாறும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

loan point
web designer

கடந்த வருடம் சத்திரம் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி  மாணவன் விடுமுறை நாட்களில் நண்பர்களோடு காவிரிக்கு குளிக்கச்சென்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

nammalvar

சமீபத்தில் திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று ஓயாமரி அருகே உள்ள காவிரி படித்துறையில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மணி(24) இளைஞர் ஒருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் தேடுகையில் அந்நபர் கிடைக்கவில்லை. திருச்சியிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் சர்கார்பாளையம் முல்லைக்குடிக்கு இடைப்பட்ட ஆற்றுப்பகுதியில் ஒருவரை சடலமாக மீட்டனர்.

மற்றொரு நபரை தேடும் பணி ஈடுப்பட்ட வந்த நிலையில் அவரின் உடல் இன்று ஓட்டக்குடி படித்துறை அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இறந்தது பூசாரி தெருவை சேர்ந்த மணி என்பவர் என கண்டறியப்பட்டது.

மேலும் நீரின் வேகத்தை கண்டு மாவட்ட நிர்வாகம் ஆற்றின் கரையோரத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. எனவே ஆற்றிற்கு குளிக்க செல்லபவர்கள் மிக கவனமாக செல்லவேண்டும் கூறப்பட்டுவருகிறது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.