11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த  திருச்சி கொலைகாரன் கைது !

0
D1

11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த  திருச்சி கொலைகாரன் கைது !

துறையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி என்ற ரவிச்சந்திரன்(வயது 52). கடந்த 2006-ம் ஆண்டு உத்தமர்கோவிலில் நடந்த ஒரு கொலை வழக்கில் ரவிச்சந்திரனை கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசார் கைது செய்தனர். இது சம்பந்தமாக திருச்சி செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, சிைறயில் அடைக்கப்பட்டார்.

D2
N2

இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ரவிச்சந்திரன் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் கோர்ட்டில் தொடர்ந்து அந்த வழக்கு நடந்து வரும் நிலையில், கோர்ட்டில் ஆஜராகாமல் ரவிச்சந்திரன் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து ஆஜர்படுத்த சமயபுரம் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சமய புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார், ரவிச்சந்திரனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் துறையூரில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி கோர்ட்டில் ரவிச்சந்திரனை ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்பேரில் ரவிச்சந்திரனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரவிச்சந்திரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

N3

Leave A Reply

Your email address will not be published.