திருச்சி மண்டல  BSNL. நிறுவனத்தில் 1,600 ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் பரிதாபம் !

0
D1

திருச்சி மண்டல  BSNL. நிறுவனத்தில் 1,600 ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் பரிதாபம் !

மண்டல பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கடந்த மாத (ஆகஸ்டு) சம்பளம் வழங்காததால் 1,600 ஊழியர்கள் பரிதவித்து வருகிறார்கள்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாத இறுதி நாளான 30 அல்லது 31-ந்தேதி சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கான ஆகஸ்டு மாத சம்பளம் கடந்த 31-ந்தேதி வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

D2
N2

இதனால் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் அடங்கிய பி.எஸ்.என்.எல். திருச்சி தொலைத்தொடர்பு மண்டலத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சுமார் 1,600 பேர் பரிதவித்து வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களது குடும்பம் பட்டினியால் வாடுவதாகவும், குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் தவித்து வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நிரந்தர ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஆகஸ்டு மாத சம்பளம் வழங்கப்படாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட துணை செயலாளர் எஸ். காமராஜ் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஊழியர்களுக்கு ஆகஸ்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. பராமரிப்பு பணிக்கு தேவையான நிதி இல்லாததால் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி பணிகளில் தேக்கம் ஏற்பட்டு உள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பாக பி.எஸ்.என்.எல். செலுத்திய கூடுதல் தொகை ரூ.2,500 கோடி கிராமப்புற சேவைவை வழங்குவதால் ஏற்படும் இழப்பீடுகள் ரூ.19 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கினால் தான் நிதி சிக்கலை சரி செய்ய முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

N3

Leave A Reply

Your email address will not be published.