திருச்சி காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

0
D1

திருச்சி காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மாவட்டத்தில் காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கலெக்டர் எஸ்.சிவராசு அறிவுறுத்தி உள்ளார்.

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

D2

இதனால், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சி காவிரி ஆற்றில் முக்கொம்பு மேலணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளது.

N2

இந்த நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிரு‌‌ஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

இதனால் மேட்டூர் அணையானது அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலையில் உள்ளது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து 32,500 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத்தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரி நீர் வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோசெல்பிஎடுக்க அனுமதி இல்லை.

வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் 93840 56213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பலாம். அத்துடன் தாசில்தார்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள தெரிவிக்கலாம். TNSMART என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

N3

Leave A Reply

Your email address will not be published.