வீர தீரச் செயல் புரிந்த பெண் சிறார்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

0
full

வீர தீரச் செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு :

half 2

தமிழக அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மூலம் “பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்துப் பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் வீரதீரச் செயல் புரிந்த 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு, கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் மாநில விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது.

poster

அதன்படி, ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் குழந்தைக்கு, தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் ஜன. 2020ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2019ன் படி) தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் 31.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் , காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட ஏதோ ஓர் அலுவலர் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு 24.01.2020 அன்று மாநில விருது வழங்கப்படும்.
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி- 620 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2413796.

half 1

Leave A Reply

Your email address will not be published.