திருச்சி வளனார் கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்ட“வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம்”

0
full

வெள்ளிக்கிழமை அன்று தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை- செப்பர்டு சார்பாக¸ புதுக்கோட்டை மாவட்டம்¸ விராலிமலை ஒன்றியம்¸ மேலப்பச்சக்குடி பஞ்சாயத்து சரளப்பட்டியில் “வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம்” தொடங்கப்பட்டது.

சரளப்பட்டி¸ ஊர் பட்டயத்தார் திரு.ரெங்கசாமி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விரிவாக்கத்துறையின் மூத்த ஓருங்கிணைப்பாளர்¸ திரு ராஜா அவர்கள் சுற்றுசுழல் பற்றிய விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார். சரளப்பட்டி துணைத்தலைவர் சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்கள. விரிவாக்கத்துறையின் இயக்குநர்¸ அருட்பணி. பெர்க்மான்ஸ் சே.ச அவர்கள் வாழ்த்துரை வழங்கி¸ முதல் மரக்கன்றை நட்டு வைத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.  அவர் தனது உரையில் மரங்களால் ஏற்படும் நன்மைகள்¸ பாதுகாப்பு பராமரிப்பு பற்றி சிறப்புரை வழங்கினார்;. வீட்டிற்கு ஒன்று வீதம் சுமார் 300க்கும் மேற்பட்ட மா¸ எலுமிச்சை¸ மாதுளை¸ சப்போட்டா¸ மற்றும் வேப்பம்¸ அரசு¸ புங்கை ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

half 2

சூற்று புற சூழல் பற்றிய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பணிமுறை இரண்டு¸ மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவன் செல்வன் கௌதம் அவர்கள்¸ வந்தவர்களை வரவேற்றார்.

முடிவில் மாணவர் மனோஜ் பிரபாகரன் நன்றி கூறினார். பணிமுறை இரண்டு¸ மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

poster

பணிமுறை இரண்டு¸ வணிகவியல் துறை ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன்¸ மற்றும் குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். சரளப்பட்டி ஊர் மக்கள் சுமார் 350க்கும் மேற்பட்டோர்கள் இந்நிகழ்ச்சியல் கலந்து கொண்டார்கள்.

half 1

Leave A Reply

Your email address will not be published.