திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். பதவி உயர்வில் தேக்க நிலையை களைய வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துற்கு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் செல்வராஜ், வட்ட பொருளாளர் இருதயராஜ் ,நகர கோட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை குறித்து பேசினர். இதில் சி.ஐ.டி.யு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷீர ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
