திருச்சியில் செப்.14 தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

0
Business trichy

திருச்சி மாவட்டத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப்.14) நடைபெறுகிறது என திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Full Page

இதுதொடர்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக் கொள்ளும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளது.
இந்த நீதிமன்றத்தில் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் நிலுவையில் உள்ள சொத்து வழக்குகள், வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான வழக்குகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணலாம். மேலும் விவரங்களுக்கு, சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலகத்தை 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Half page

Leave A Reply

Your email address will not be published.