கீழே கிடந்த 50,000 ரூபாய் கட்டு ! ஆசிரியர் தினத்தில் அசத்திய திருச்சி மாணவிகள் !

0
1

திருச்சி புங்கனூரில் புனித வளனார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கனிஷ்கா, மதுஸ்ரீ ஆகிய மாணவிகள் இன்று காலை பள்ளியிலிருந்து தூய்மை பாரதம் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டு ஊர்வலம் நடந்து வந்திருக்கிறார்கள். அப்போது  தாயனூர் மேலக்காடு அருகே 50,000 பணக்கட்டு ஒன்று கீழே கிடந்து உள்ளது.

அதை, அந்த மாணவிகள் எடுத்து தலைமை ஆசிரியர் மெட்டில்டா மற்றும் தாளாளர் செபாஸ்டின் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். ஆசிரியர் தினமான இன்று மாணவிகளின் இச்செயல் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதுடன் மாணவிகளை ஆசிரியர்கள் சக மாணவ, மாணவிகள் பாராட்டி வருகின்றனர்.

பணத்தின் மீதான மரியாதையும், அதன் பயன்பாட்டையும் புரிந்து வைத்திருந்த மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துகள்.

3

Leave A Reply

Your email address will not be published.