வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய பொதுமக்களுக்கு உதவ வேண்டும் அதிமுக மா.செ. வேண்டுகோள்.

0
D1

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வாக்காளர்களுக்கு உதவுமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ப. குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.

N2

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் திருத்தம் செய்யும் பணியை அரசு இ-சேவை மையங்களிலோ அல்லது பிரத்யேகமாக மொபைல் ஆப் மற்றும் இணைய தளம் மூலமாகவோ மேற்கொள்ளலாம்.

D2

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்பும்    வாக்காளர்களுக்கு அதிமுக, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, வட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உதவிடவேண்டும்.

அதுபோல வாக்காளர்களும் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விதமான திருத்தங்களையும் செப். 30 ஆம் தேதிக்குள் திருத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.